இனி பக்தர்களுக்கு 8 வகை சுவையான பிரசாதங்கள்: அவை என்னென்ன?

By காமதேனு

முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், மருதமலைஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், உட்பட 10 திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை கணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் சேகர் பாபுத, "முதல்வரின் வழிகாட்டிதலின்படி கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கையில் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள் தோறும் வழங்கப்படும். இதனால் 10,000 முதல் திருவிழா காலங்களில் 25,000 மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள்.

அதற்கு தகுந்தார் போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள் தரமாக தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள 341 திருக்கோயில்களின் பிரசாதம், நைவேத்யம், உணவு தொடர்பாக ஒன்றிய அரசிடம் தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் இடையே முரண்பாடு ஏற்படாமல் தீர்வு காணப்படும். முறைகேடுகளை களைய இந்து அறநிலையத்துறை சட்டங்கள் வலிமையாக இருப்பதால் சிதம்பரம் கோயில் தொடர்பாக புதிய சட்டம் தேவையில்லை. சிதம்பரம் கோயில் தொடர்பான நீதிபதி உத்தரவு நகல் நேற்று பெறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி புதிய குழு அமைத்து தீர்வு காண உள்ளோம். தீட்சிதர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை செயல்படும். ஆயிரம் ஆண்டு பழைமையான திருக்கோயில்கள் சீரமைக்க இந்த ஆண்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறைகளை சுட்டிக்காட்டினால் நிறைவு செய்வோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE