திருவெண்காடு தேரோட்டத்தில் துர்கா ஸ்டாலின்

By கரு.முத்து

தனது சொந்த ஊரான திருவெண்காட்டில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்.

கோயில் தேரோட்டத்தில் துர்கா ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவின் சொந்த ஊர். அங்குள்ள சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் இந்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. அதன் 9-ம் நாள் திருவிழாவான இன்று, பிப்.21 திருத்தேரோட்ட நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 5 மணி அளவில் சுவேதாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தேருக்கு கொண்டுவரப்பட்டார். காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின், இதில் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தார். அதன் பின்னர், தனது இல்லத்தின் வெளியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானத்தை திருமதி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அன்னதானம் தொடங்கி வைக்கும் துர்கா ஸ்டாலின்

அவருடன் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE