திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டிக்கெட்!

By காமதேனு

கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், இன்று முதல் மீண்டும் இலவச தரிசனத்துக்கான டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலமே, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், இன்று முதல் காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி உள்ளிட்ட 3 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதல் இரவுவரை தரிசனத்துக்கான நேரம் கணக்கிட்டு, நாள்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE