கும்பகோணம் - பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா இன்று (சனிக்கிழ்மை) காலை நடைபெற்றது.

தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் முத்துப்பந்தல் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி 13 ஆம் தேதி காலை கோயிலிலுள்ள ஞானவாவி குளத்தில், திருஞானசம்பந்தருக்கு, சுவாமி- அம்மன் காட்சி அளித்து, திருமுலைப்பால் வழங்கப்பட்டது. இரவு திருஞானசம்பந்தருக்கு பொற்றளம் அளித்து, அதனுடன் வீதியுலா நடைபெற்றது.

ஜூன் 14- ம் தேதிஜ காலை 8.30 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு, இறைவன் வழங்கிய முத்துக் கொண்டை, முத்துக்குடை, முத்து சின்னங்களுடன் வீதியுலா, இரவு மின்னொளியில் அலங்கரிக்கப் பட்ட முத்து திருவோடத்தில் திரு ஞானசம்பந்தர் வீதியுலா நடைபெற்றது.

இன்று, காலை 7 மணிக்கு திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்து, தொடர்ந்து திருமேற்றளிகை கைலாசநாதர் கோயிலுக்கும், மதியம் 12 மணிக்கு திருசக்திமுற்றம் சக்திவனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திருஞானசம்பந்தர். கோயிலுக்கும். மதியம் 1 மணிக்கு பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும் வீதியுலாவாக சென்று, சுவாமி தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து,இன்று இரவு 8 மணிக்கு ஞானாம்பிகை யம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் முத்து விமானத்தில் காட்சியளிக்க, அவர்களை திருஞானசம்பந்தர் எதிர்வணங்கி, முத்துப்பந்தல் நிழலில் வீதியுலா வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ம.ஆறு முகம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE