நித்ய சொர்க்கவாசல்

By கே.சுந்தரராமன்

ஸ்ரீபெரும்புதூர் தலத்தின் சிறப்புகளில் ஒன்று, அது ராமானுஜர் அவதரித்த பூமியாகும். இத்தலம் நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கு சொர்க்கவாசல் கிடையாது.

வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஆதிகேசவ பெருமாள், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளும் வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல், இங்குள்ள சந்நிதியின் கதவைத் திறப்பார்கள்.

இந்த மணிக்கதவை திறக்கும் வேளை, சொர்க்கவாசல் திறப்பு வேளையாகக் கருதப்படுகிறது.

பூதகணங்களுக்கு சாபவிமோசனம் வழங்கப்பட்ட தலம் என்பதால் ‘பூதபுரி’ என்றும் பெயர் பெறுகிறது. அனந்தன் என்ற சர்ப்பத்தால் தீர்த்தம் உண்டாக்கப்பட்டு, அந்த தீர்த்தக் கரையில் அதற்குச் சாப விமோசனம் அளித்தார் திருமால். அதற்கு நன்றிக் கடனாகப் பூதகணங்கள் அனைத்தும் சேர்ந்து இங்கு சுவாமிக்கு கோயில் எழுப்பின. பிற்காலத்தில் ‘ஸ்ரீபெரும்புதூர்’ என்று அழைக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE