விநாயகர் சதுர்த்தி- பரபரப்பில்லாத பூ வியாபாரம்

By கா.சு.வேலாயுதன்

கோவை பூ மார்க்கெட் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் அல்லோல கல்லோலப்படும். சதுர்த்திக்கு முந்தைய நாள் நெரிசலை விலக்கி செல்ல முடியாது. அந்த அளவு கூட்டம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, கடைகளுக்குள் முட்டி மோதாமல் ரொம்ப சுலபமாக சென்று வர முடிந்தது.

பூ மார்க்கெட் வியாபாரிகள் இது பற்றிக் கூறும்போது, ‘‘எப்பவும் பூ வரத்து குறைவாக இருக்கும். கூட்டம் மிகுதியாக இருக்கும். அதனால் விலையும் கூடுதலாக இருக்கும். இந்த ஆண்டு பூவரத்து ஒன்றுக்கு மூன்று மடங்கு கூடுதலாக உள்ளது. கூட்டமோ ஒன்றுக்கு மூன்று மடங்கு குறைவாக உள்ளது. அதனால் கடந்த ஆண்டு ரூ.300-க்கு விற்ற செவந்திப்பூவை இப்போது ரூ. 100-க்கு விற்கிறோம். இருந்தாலும் பூ கடுமையாக தேங்கிக்கிடக்கிறது. அதற்கு கரோனா மட்டும் காரணமல்ல. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பண்டிகை திருவிழாவில் நாட்டமும் இருப்பதில்லை” என்றனர்.

பரபரப்பில்லாமல் வியாபாரம் நடக்கும் கோவை பூ மார்க்கெட் காட்சிகளின் புகைப்பட தொகுப்பு இதோ...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE