பதி, பசு, பாசம் என்று சொல்வதுண்டு.
பதி என்பது ஈசனைக் குறிக்கும்.
பசு என்பது உயிர்களைக் குறிக்கும்.
பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகும்.
ஈசனின் பஞ்ச கிருத்தியங்கள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகும்.
ஆணவம் என்பது உயிர்களின் அறிவை மறைக்கும் சக்தி உடையது. இந்த அறிவில் நமது விருப்பு, வெறுப்பு, ஆசைகள் அனைத்தும் அடங்கும்.
உயிர்களுக்கு இன்ப, துன்பங்களைத் தருவது கர்மம்.
மாயை என்பது உண்மையை மறைக்கும்; பொய்யை மெய் போல் காட்டும்.
ஆணவத்தை நீக்குவதையே நம் லட்சியமாகக் கொள்ள வேண்டும். ஆணவம் நீங்கினாலே கர்மமும் மாயையும் நீங்கும், பின், உயிரில் சிவம் விளங்கும். அப்போது அந்த உயிர் சிவம் அளிக்கும் இன்பத்தை நுகரும்; அந்த இன்பம் என்றும் அழியாது. இதுதான் ‘முக்தி’. சைவ சித்தாந்தம் கூறும் முக்தியும் அதுதான்.
நம் உள்ளத்தில் தோன்றாது மறைத்திருத்தலே இறைவன் பள்ளி கொள்வது எனப்படும். இந்நிலை ‘திரோதானம்’ எனப்படும். அவன் எழுவது என்பது, அந்த மறைவு நீங்கி வெளிப்படுதல். அவ்வாறு மறைந்த அவனை எழச்செய்யப் பாடுவது திருப்பள்ளி எழுச்சி ஆகும். இதற்குத் ‘திரோதான சுத்தி’ என்று பெயர்.
நம் உள்ளத்திலும் ஆணவத்தை அழித்து சிவத்தை எழச் செய்வோம்….
ஓம் நமசிவாய..