தைப்பூசம்

By கே.சுந்தரராமன்

தைப்பூசம் குறித்து நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியும். இப்போது பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாவைப் பார்ப்போம்.

தஞ்சை மாவட்டம் திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தத் தலத்தில் சாரநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு தைப்பூசத் திருநாள் 10 நாட்களுக்கு மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். 10-வது நாளில் தேரோட்டம் நடைபெறும். தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சரித்த நேரத்தில் திருமால் காவிரித் தாய்க்கு அருள்பாலித்தார். அதனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைப்பூச தினத்தில் குரு (வியாழன்) வரும் சமயத்தில் இந்த தலத்தில் உள்ள சார புஷ்கரிணியில் நீராடினால் அது மகாமகத்துக்கு சமமானது என்பதால் இந்த தினத்தில் பெரிய வைபவமாக கொண்டாடப்படுகிறது.

இத்தல பெருமாளை வழிபடுவதால் 100 முறை காவிரியில் நீராடிய பலன் கிடைக்கும் என்று ந்ம்பப்படுகிறது.

குடந்தையில் இருந்து 14 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE