காய்ச்சின பறவை

By கே.சுந்தரராமன்

திருமாலின் அவதாரமாக இருப்பவர் இவர். ஆமாம். கருடாழ்வார் தான். கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. திருமாலை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஆன்றோர் வாக்கு.

தாஸ – ஸகா – வாகனம்

திருமால் திருவடி தாங்கும் பெரிய திருவடியாக, தோழனாக எப்போதும் திருமால் அருகே இருப்பவர் கருடாழ்வார்.

காய்ச்சினப்பறவையூர்ந்தானே..

தனது கோபத்தால் எதையும் கொத்தி புரட்டும் குணம் கொண்டது கருடன். ஆனால், பெருமாள் பக்தர்களை ஏதும் செய்யாது. பெருமாளுக்கு சிரமம் கொடுக்காமல் அவர் பக்தர்களின் சிரமங்களை களைந்து விடுவார் கருடாழ்வார்.

கோபம் கொள்ளும் பறவை கருடன். அதன் மீது திருமால் வலம் வருகிறார். திருமாலும் கோபம் கொண்டு எதிரிகளை வீழ்த்துவார். அவருக்கு பெரும் உதவியாக இருப்பவர் கருடாழ்வார். அவரே வாகனமாகவும் கொடியாகவும் இருக்கிறார்.

கஜேந்திர மோட்சத்தில் கருடாழ்வாருக்கு பெரும்பங்கு உண்டு. இதன் மூலம் திருமாலின் எளிமை அறியப்படுகிறது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் திருமால். அவருக்கு உதவியாக கருடாழ்வார். திருமால் வருவதை அறிவிக்க கொடியாக கருடாழ்வார்.

தன் தாய் மீதான பக்தியை உணர்த்தியவர் கருடாழ்வார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE