பழநி: பழநியில் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளிநாட்டினருக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் வரும் ஆக.24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய https://muthamizhmuruganmaanadu2024.com என்ற வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பாளர் பதிவு படிவம் என்பதை தேர்வு செய்து, பங்கேற்பாளரின் பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின், மொபைல் எண்ணுக்கு வரும் கடவுச்சொல்லை (ஓடிபி) பதிவு செய்து, அடுத்த பக்கத்துக்குள் செல்ல வேண்டும். அங்கு இடம்பெற்றுள்ள வங்கிகள் அல்லது கூகுள் பே மூலம் பணத்தை செலுத்தினால் மட்டுமே மாநாட்டில் பங்கேற்பதற்கான பதிவு முழுமை பெறும். பின்னர் மாநாட்டில் பங்கேற்பதற்கான பதிவு ரசீது ‘பிடிஎப்’ ஃபைலாக பங்கேற்பாளர் களுக்கு அனுப்பப்படும்.
» இண்டியா கூட்டணியின் சனாதன விரோத மனோபாவம்: பாஜக விமர்சனம்
» ஷரியா முஸ்லிம் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: யோகி ஆதித்யநாத்
பக்தர்கள் அதிருப்தி: முருகன் மாநாடு தொடர்பாக தனி வலைதளம் அறிமுகப்படுத்தும்போது மாநாட்டில் பங்கேற்பதற்கு கட்டணம் உண்டு என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்யும்போது கட்டணம் செலுத்தக் கோருவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வலைதளத்தில் சுலபமாக விண் ணப்பிக்க முடியாத நிலையும் உள்ளது.
சர்வர் பிரச்சினையால் அடுத்தடுத்த பக்கங்களுக்குள் செல்வதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. கட்டணம் செலுத்திய பிறகு சர்வர் பிரச்சினையால் கட்டணம் செலுத்தியற்கான ரசீதும், பதிவுச்சான்றும் உடனே கிடைப்ப தில்லை. இந்தப் பிரச்சினையால் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கட்டணம் வசூலிக்க கூடாது: இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது வர வேற்கத்தக்கது. ஆனால் மாநாட்டில் பங்கேற்க கட்டணம் உண்டு என அறநிலையத் துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பதிவின் கடைசி பகுதியாக ரூ.500 கட்டணம் செலுத்தினால்தான் புகைப்படத்துடன் கூடிய பதிவு ரசீது கிடைக்கிறது. இதேபோல் வெளிநாட்டவருக்கு கட்டணமாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக அனுமதிக்க வேண்டும். கட்டணம் வசூலித்தால் மாநாட்டின் 2 நாட்களும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் உள் ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், என்றனர்.