புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் ஐபிஎல் 2025-ல் களமிறங்குகிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
கே.எல்.ராகுல், டு பிளெஸ்ஸிஸ் வருகை டெல்லி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக் கூடும்.
அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக் கூடியவர்கள்.
கருண் நாயர்ம், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா ஆகியோரும் டெல்லி அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடும்.
» கொளுத்தும் வெயில்; சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் வன விலங்குகள், பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
» ‘அப்பாவை போல எனக்கும் டார்கெட்’ - நெல்லை ஜாகிர் உசேன் மகன் பகீர் வீடியோ; 16 வயது சிறுவன் கைது
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் வருகை உத்வேகம் அளிக்கும். டி.நடராஜன், முகேஷ் குமார், மோஹித் சர்மா உறுதுணை புரிவர்.
சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்களே என்றாலும், வேறு யாரும் இல்லாதது வீக்னஸ்.
அணியில் தங்கியவர்கள்: அக்சர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரெல் (ரூ.4 கோடி).