IPL 2025 Shots: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ப்ளஸ் என்ன?

By ப்ரியன்

ஐபிஎல் 2025-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வலுப்படுத்தும் விதமாக மெகா ஏலத்தில் அதிரடி முடிவுகளை குஜராத் அணி உரிமையாளர்கள் மேற்கொண்டனர்.

ஷமி, நூர் அகமது, டேவிட் மில்லரை வெளியேற்றிவிட்டு ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெரால்டு கோட்ஸியை ஏலம் எடுத்தனர்.

வேகப்பந்து வீச்சுக்காக முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணாவை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். வாஷிங்டன் சுந்தரின் வரவும் குஜராத் அணிக்கு மிக முக்கியமானது.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி படைக்குப் பக்கபலமாக ஆல்ரவுண்ட ரஷித் கான் மிரட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.

சாய் சுதர்ஷன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா நடுவரிசை பேட்டிங்கில் பலம். தொடக்க வீரராக சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் களமிறங்குவதும் பலம்.

ஜாஸ் பட்லர், காகிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரஷித் கான் ஆகியோர் இந்த சீசனில் விளையாடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களாக நிச்சயமாக இடம்பெறுவர்.

ரூ.15.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜாஸ் பட்லர் தொடக்க வரிசையில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர் என்பது கவனிக்கத்தக்கது.

வெற்றிகரமான வேகப் பந்துவீச்சாளர் ரபாடா, ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் குஜராத் அணிக்கு கூடுதல் பலம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE