போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார் 

By KU BUREAU

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் மீண்​டும் அதிப​ராக பதவி​யேற்ற ட்ரம்ப், ரஷ்​யா- உக்​ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்​பி​னார்.

உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி​யிடம் நடத்திய பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​ததும், ஆயுத உதவி​களை அமெரிக்கா நிறுத்​தி​யது. இதையடுத்​து, அமெரிக்கா முன்​மொழிந்த 30 நாள் போர் நிறுத்த திட்​டத்​துக்​கு, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கடந்த 11-ம் தேதி ஒப்​புக் கொண்​டார். இதையடுத்து ரஷ்ய அதிபர் புதினிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று இரவு போனில் பேசி​னார். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. போர் நிறுத்​தம், கைப்​பற்​றியநிலப் பகு​தி​களை பிரித்​துக் கொள்​வது, படைகளை வாபஸ் பெறுவது ஆகியவை தொடர்​பாக​ இரு நாட்டு தலைவர்களும்​ பேசினர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE