சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

By KU BUREAU

சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மறுமதிப்பீட்டுக்கு மார்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வி.ஏழுமலை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இளங்கலை, முதுகலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.egovernance.unom.ac.in/results/ www.exam.unom.ac.in/results/ இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பின்பு இளங்கலை படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும், அதேபோல், 2023-2024-ம் கல்வி ஆண்டு மற்றும் அதன் பிறகு முதுகலை படிப்புகள் மற்றும் தொழில் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திக்கொள்ளலாம். அதேபோல், இளங்கலை பயிலும் மாணவர்கள் மறுகூட்டலுக்கு மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300. இக்கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிடலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE