இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது; நாங்கள் ரூ.182 கோடி கொடுக்க வேண்டும்? - ட்ரம்ப் கேள்வி

By KU BUREAU

அமெரிக்​கா​வில் புதிய அதிபராக ட்ரம்ப் மீண்​டும் பதவி​யேற்​றார். அதன்​பின், அமெரிக்​கா​வின் செலவுகளை குறைக்க டெஸ்லா நிறு​வனர் எலான் மஸ்க் தலைமை​யில் அரசு செயல்​திறன் துறையை(டிஓஜிஇ) ட்ரம்ப் உருவாக்​கினார்.

அவர் பல்வேறு நாடு​களுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி​யுதவிகளை ரத்து செய்​வதாக சமீபத்​தில் அறிவித்​தார். அதன்​படி, இந்தியா​வில் தேர்​தலின் போது வாக்கு சதவீதத்தைஅதிகரிக்க ரூ.182 கோடி அமெரிக்கா வழங்கி வந்ததை ரத்து செய்​வதற்கான நிர்வாக உத்தர​வில் ட்ரம்ப் நேற்று கையெழுத்​திட்​டார். அப்போது அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, ‘‘இந்தியா​விடம் நிறைய பணம் உள்ளது. அங்கு தேர்​தலின் போது வாக்கு சதவீதம் அதிகரிக்க அமெரிக்கா ஏன் ரூ.182 கோடிவழங்க வேண்​டும்? உலகிலேயே அதிக வரி விதிக்​கும் நாடு​களில் இந்தியா​வும் ஒன்று. அதனால் அமெரிக்க பொருட்களை இந்தியா​வுக்கு ஏற்றுமதி செய்​வ​தில் சிக்கல் உள்ளது. பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்​துள்ளேன். அதேநேரத்​தில் அந்த நாட்டு தேர்​தலில்வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா ஏன் பணம் வழங்க வேண்​டும்?​’’ என்​றார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE