கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று டெல்டா விமானம் தரையிறங்க முற்பட்டபோது தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து டெல்டா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ டெல்டா விமானம் 76 பயணிகளுடன் மின்னபோலிஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியபோது ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், குழந்தை உட்பட 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை,. விபத்து நடந்த பகுதிக்கு அவசர குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளின் உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், டெல்டா விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி விபத்து ஏற்பட்டதையடுத்து, விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை சில மணி நேரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. காயமடைந்த 18 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது