சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது: நாடு முழுவதும் 42 லட்சம் பேர் பங்கேற்பு

By KU BUREAU

சென்னை: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் இருந்து 1.40 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 42 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 10-ம் வகுப்புக்கு ஆங்கில பாடத் தேர்வும், 12-ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத் தேர்வும் நடைபெற்றன.

தேர்வு மையங்களில் பலத்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

10-ம் வகுப்புக்கு மார்ச் 18-ம் தேதி வரை 84 பாடங்களில் தேர்வு நடைபெறுகிறது. 24.12 லட்சம் பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்புக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை 120 பாடங்களில் தேர்வு நடைபெறுகிறது. 17.88 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் இருந்து சுமார் 1.40 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கின்றனர். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மே முதல் வாரம் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE