மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்வு! 

By KU BUREAU

சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 7,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென குறைந்து கிராமுக்கு 7,940 ரூபாயாகவும், சவரனுக்கு 63 ஆயிரத்து 520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE