சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 7,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பல நாட்களாக எகிறிய தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்து கிராமுக்கு 8,010 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ஆயிரத்து 80 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 70 ரூபாய் குறைந்து 7,940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 560 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
» பரிதாபங்கள் கோபி, சுதாகரின் ‘ஓ காட் பியூட்டிஃபுல்' திரைப்படம்: சூப்பர் அப்டேட்!
» ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: 14 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!