தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை மகா தேரோட்டம்!

By KU BUREAU

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை (10-ம் தேதி) மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த டிச.1-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது.

காவல் தெய்வ மான துர்க்கை அம்மன், பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்றது. பின்னர், மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கடந்த டிச.4-ம் தேதி கொடியேற்றப்பட்டது. பின்னர், 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, நாளை (10-ம் தேதி) 7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது. காலை 6 மணிக்கு மேல் 6.48 மணிக்குள் விநாயகர் தேர் புறப்பாடு உள்ளது. இதையடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணா மலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகி யோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, மாட வீதியில் வரவுள்ளனர்.

ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகுதான், அடுத்த தேர் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும். அண்ணாமலையாருக்கு அரோ கரா என முழக்கமிட்டு, தேர்களைப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வணங்குவர்.

ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வருவது என்பது, திருவண்ணாமலையின் சிறப் பாகும். மகா தேரோட்டத்தில் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என காவல் துறை யினர் கணித்துள்ளனர். மகா தேரோட்டத்தையொட்டி காவல்துறை முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுத்துள்ளது.

வாகனங்களை நிறுத்த தடை: மகா தேரோட்டம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகா தேரோட்டம் நடைபெறும் மாட வீதிகளை இணைக்கும் அசலியம்மன் கோயில் தெரு, பே கோபுர 3-வது தெரு, பே கோபுர பிரதான சாலை, கொசமடை தெருவில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மேலும் மாட வீதியில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப் படும். மாட வீதியில் உள்ள நான்கு திசையின் சந்திப்புகளிலும் மக்கள் கூட வேண்டாம்.

மகா தேரோட்டத்தைக் காண வருபவர்கள் குழந்தைகளையும், முதியோரையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். கைப்பேசி மற்றும் ஆபரணங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேர்கள் மீது சில்லறைக் காசுகள், தானியங்களை வீசக் கூடாது. கட்டிடங்கள் மீது ஏறி நிற்க வேண்டாம். மின்சாரம் துண்டிக் கப்பட்டிருந்தாலும், இன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டாம். தேர் களை வணங்குவதாகக் கருதி, அதன் சக்கரங்கள் அருகே செல்லக்கூடாது. கற்பூரம் ஏற்றக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE