15 ஆண்டாக சாலை, குடிநீர் வசதி இல்லை - காஞ்சிபுரம் விஜயலட்சுமி நகர் மக்கள் ஆதங்கம்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்​சிபுரம்: பிள்​ளை​யார்​பாளை​யத்​தில் தாத்தி மேடு அருகே உள்ளது விஜலட்​சுமி நகர். இந்த நகரில் கடந்த 15 ஆண்டு​களாக குடிநீர், சாலை வசதி மேற்​கொள்​ளப்​படாமல் இருப்​பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து இந்தப் பகுதி​யைச் சேர்ந்த விவசாயி ராமஜெயம் என்பவர் கூறியதாவது: விஜயலட்​சுமி நகர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்​கப்​பட்​டது. இந்த நகரில் காஞ்​சிபுரம் மக்கள் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்​டங்​கள், வட இந்திய பகுதி​களைச் சேர்ந்​தவர்​களும் குடியேறி​யுள்​ளனர். பல்வேறு வீடு​களும் இந்தப் பகுதி​யில் கட்டப்​பட்டு​விட்டன.

ஆனாலும் மாநக​ராட்​சிக்கு அருகே இருக்​கும் இந்தப் பகுதி​யின் தெருக்கள் 15 ஆண்டு​களாக மாநக​ராட்​சி​யுடன் சேர்க்​கப்​படாமல் உள்ளன. இதனால் இந்தப் பகுதிக்கு குடிநீர் வசதி, சாலை வசதி எதுவும் இதுவரை ஏற்படுத்​தித் தரப்​பட​வில்லை. இதனால், பொது​மக்கள் அவதி​யுற்று வருகின்​றனர் என்றார்.

இதுகுறித்து மாநக​ராட்சி அலுவலர்​களிடம் கேட்​ட​போது, அந்தப் பகுதி​யில் 15 ஆண்டு​களுக்கு முன்பு விவசாய நிலத்தை வீட்டுமனை​களாக பிரித்து விற்றுள்​ளனர். வீட்டுமனை​களாக விற்ற பின்னர் தெருக்​கள், பூங்​காக்​களுக்கு ஒதுக்​கப்​படும இடத்தை மாநக​ராட்​சி​யிடம் அதன் உரிமை​யாளர் ஒப்படைத்​திருக்க வேண்​டும்.

ஆனால் அந்த நகரின் தெருக்கள் எல்லாம் தனியார் பெயரிலேயே உள்ளது. அதுபோல் தனியார் பெயரில் இருக்​கும் இடத்​துக்கு மாநக​ராட்சி மூலம் பணிகள் செய்ய முடி​யாது. இதனை மாநக​ராட்​சிக்கு மாற்று​வதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க முடி​யும் என்பது குறித்து ஆலோ​சித்து ​முடிவு எடுக்​கப்​படும் என்​றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE