சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, 53,800 ரூபாய்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55 ஆயிரம் ரூபாய் வரை அதிரடியாக உயர்ந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். இதனிடையே கடந்த மே 10ம் தேதி அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 155 ரூபாய் அதிகரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது.
மே 11ம் தேதி முதல் மே 14ம் தேதி வரை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் வரை விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 6,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நேர வர்த்தகம் துவங்கியது முதலே தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் அதிகரித்து 6,725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 280 ரூபாய் அதிகரித்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் தங்கத்தின் விலை ஏறு முகத்தில் இருந்து வருவது தங்கம் வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 30 பைசா அதிகரித்துள்ளது. நேற்று 90 ரூபாய் 70 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.