ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் குவியும் டீப்ஃபேக் ஆபாசங்கள்... மெட்டா நிறுவனத்துக்கு புதிய தலைவலி

By காமதேனு

மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் டீப்ஃபேக் ஆபாசங்களை அகற்றுவது பெரும் சவாலாகவும், சட்டச் சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தனது வருமானத்திற்காக பெருமளவு விளம்பரங்களையே நம்பி உள்ளது. ஆனால் அந்த விளம்பரங்கள் டீப்ஃபேக் அடிப்படையிலான போலியாகவும், அனுமதி பெறாத பிரபலங்களின் நகலாவும் அமைந்து விடுகின்றன. கூடவே க்ரியேட்டர்கள் என்ற பெயரில் இளம் வயதினர் மத்தியில் அதிகரிக்கும் டீப்ஃபேக் அடிப்படையிலான ஆபாசங்களும் மெட்டாவுக்கு தலைவலியாகி உள்ளன.

மெட்டா

இதர சமூக ஊடக டிஜிட்டல் தளங்களைப் போலவே, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, அதன் பெரும்பாலான வருவாயை விளம்பரத்தில் இருந்தே பெறுகிறது. புள்ளிவிவரங்களின்படி, 2023-ல், அதன் விளம்பர வருவாய் 131 பில்லியன் அமெரிக்க டாலராகும். இது முந்தைய ஆண்டான 2022-ல் 119 பில்லியன் டாலரைவிட சற்றே இது அதிகமாகும். இப்படி ஒரு பக்கம் விளம்பர வருவாய் அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் சர்ச்சைகளையும் சேர்த்து வருகிறது.

ஏஐ உருவாக்கத்திலான டீப்ஃபேக் உள்ளடக்கம் அடிப்படையிலான விளம்பரங்கள் மெட்டாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளம்பரச் செயல்முறைகள் அனைத்தும் தானியங்கி முறையில் இயங்குவதால், ஆபாச உள்ளடக்கம் நிறைந்த விளம்பரங்களை ஏற்றுக்கொள்வதற்கு, மெட்டாவை ஏமாற்றுவதற்காக மோசடியாளர்கள் ஏஐ அடிப்படையிலான உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாக சகலத்தில் டீப்ஃபேக் படைப்புகளே நிரம்பி வழிகின்றன.

இந்த டீப்ஃபேக் ஆர்வலர்களுக்கு சந்தையில் கிடைக்கும் செயலிகளே போதுமானதாக அமைந்து விடுகின்றன. பாலுணர்வைத் தூண்டும் மெய்நிகர் காதலிக்கான செயலிகள், ஆடைகளை நீக்கி நிர்வாணமாக்கும் செயலிகள் உள்ளிட்டவை வயது வந்தோருக்கான உள்ளடக்கத்திற்கு எதிரான மெட்டாவின் கொள்கைகளை மீறுகின்றன. இன்ஸ்டாகிராமில் இரைந்து கிடக்கும் கற்பனையான தமிழில் பாலியல் கதை சொல்லும் கதாபாத்திரங்களே இதற்கு சிறந்த உதாரணம். இவையே டீப்ஃபேக் விளம்பரங்களாகவும் கிடைக்கின்றன.

டீப்ஃபேக் நுட்பம்

மெட்டா நிறுவனம் வயது வந்தோருக்கான உள்ளடக்கம் கொண்ட விளம்பரங்களைத் தடைசெய்வதாகக் கூறுகிறது. மேலும் விதிமீறலான விளம்பரங்களை அகற்றுவதாகவும் உறுதியளிக்கிறது, ஆனால் இந்த விளம்பரங்கள் வயதுவந்தோர் விதிமீறலாக மட்டுமன்றி சட்டச்சிக்கல்களிலும் மெட்டாவை இழுத்துவிடுகின்றன. இதனையடுத்து ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளேஸ்டோரில் நிறைந்திருக்கும் சர்ச்சைக்குரிய செயலிகளை நீக்கும் பணியில் மெட்டா இறங்கியுள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE