இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

By காமதேனு

இந்தியாவில் 2023, நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக, மெட்டா நிறுவனம் சார்பில் இன்று(ஜன.1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 2021-ம் ஆண்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் சமூக ஊடகங்கள் தங்களது மாதாந்திர நடவடிக்கைகளை மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தி வருகின்றன. அவற்றின் பயனர்களின் புகார்கள் முதல் அரசின் பரிந்துரை வரை பல தரப்பிலான கோரிக்கைகளின் கீழ் முடக்கப்படும் சமூக ஊடக கணக்குகள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. வாட்ஸ் ஆப் சார்பிலான இந்த நடவடிக்கை குறித்தான தகவலும், அதனது தாய் நிறுவனமான மெட்டா வாயிலாக அறிவிக்கப்படுகிறது.

வாட்ஸ் ஆப்

சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் கணக்குகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளன. தினந்தோறும் இவற்றின் எண்ணிக்கை புதிதாக அதிகரித்தும் வருகிறது. அவற்றுக்கு இணையாக மோசடி மற்றும் முறைகேடான கணக்குகள் தடைக்கு ஆளாகியும் வருகின்றன. தங்களது விதிமுறைகளைப் பின்பற்றாத பயனர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் தடை செய்து வருகிறது.

இது தவிர்த்து இதர பயனர்கள் மத்தியிலிருந்து கிடைக்கப்பெறும் புகார்கள் தொடர்பான நடவடிக்கையின் அங்கமாகவும், இந்த களையெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாத வகையில், பயங்கரவாதம், குழந்தைகள் பாலியல், போதைமருந்து கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு 2023, நவம்பர் ஒரு மாதத்தில் மட்டும் 71,96,000 கணக்குகள் தடைக்கு ஆளாகி உள்ளன. இந்த கணக்குகளில் சுமார் 19,54,000 கணக்குகள் வாட்ஸ் ஆப் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையின் கீழ் தடைக்கு ஆளாகின. நவம்பர் ஒரு மாதத்தில் மட்டும் 8841 புகார்களை பயனர்களிடம் இருந்து பெறப்பட்டதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்

உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ் ஆப், சிறப்பான சேவையை உறுதி செய்வதற்காக தொடர்ந்து தன்னை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக பயனர்கள் மற்றும் அரசின் குரலுக்கு உடன்பட்டு, வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 75 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!

அதிகாலையில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!

குட்நியூஸ்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 27 இடங்களில் இலவச வைஃபை சேவை!

அதிர்ச்சி... ஒன்றரை வயது மகனின் கையை உடைத்த தாய்: காதலனுடன் எஸ்கேப்!

புது வருஷத்தில் தெறிக்க விட்ட சாக்‌ஷி அகர்வால்... வைரலாகும் புகைப்படங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE