அடுத்த அறிவிப்பு; ஜியோ ஏர்ஃபைபர் நாளை அறிமுகம்!

By காமதேனு

நாளை இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜியோ ஏர்ஃபைபர்

நாளை இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் ஜியோ ஏர்ஃபைபர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நொடிக்கு 1.5 ஜிகா பிட் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை இதில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு தனித்துவ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இது அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE