திருவண்ணாமலை: கார் பார்க்கிங் வசதி இல்லா மல் ஆன்மிக நகரமான திருவண்ணாமலை திணறுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. நினைத்தாலே முக்தி தரும் அண்ணா மலையார் கோயில், ‘மலையே மகேசன்' என போற்றி வணங்கப்படும் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலை உள்ளன.
உலக பிரசித்திப் பெற்ற தலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தினசரி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதேபோல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் வருகை உள்ளது. பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். விடுமுறை நாட்களிலும் பக்தர்களின் வருகை கணிசமாக உள்ளது.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாடகை மற்றும் சொந்த பயன்பாட்டில் உள்ள கார்களில் பக்தர்கள் வருகின்றனர். மேலும், பலர் குழுவாக இணைந்து வேன் மற்றும் தனியார் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.
வட ஒத்தவாடை தெரு மற்றும் பே கோபுர தெருவில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. பவுர்ணமி நாளில் திருவண் ணாமலை காந்தி நகர் மைதானம் மற்றும் ஈசான்ய மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக் கப்படுவதால், கார்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. இதனால் சாலையோரத்தில் வரிசையாக கார்கள் நிறுத்தப்படுகின்றன. பிரதான சாலையிலும் கார்களை நிறுத்தி விடுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
» அவிநாசி சாலை அண்ணா மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய திட்டம்
» மதுரை - கொல்லம் வழித்தட ரயில்களில் ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் இணைக்கப்படுமா?
இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, “உலக பிரசித்திப்பெற்ற அண்ணா மலையார் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாக மாநிலங்களில் இருந்து அதிகளவில் கார்களில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களது கார்களை நிறுத்த இடம் இல்லாததால், சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
மேலும், வீட்டு வாசல் முன்பு நிறுத்திவிடுவதால், வீட்டில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. பிரதான சாலையில் கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் நவீன கார் பார்க்கிங் வசதியை திராவிட மாடல் ஆட்சியில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றனர்.