சிலிண்டர் விலை கிடு கிடு உயர்வு...வணிகர்கள் அதிர்ச்சி!

By காமதேனு

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.26.50 உயர்த்தப்பட்டுள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மாதத்தின் முதல் நாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. அதன்படி 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்துள்ளது. இதனால் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.1968-க்கு விற்பனையாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE