அடுத்த அதிர்ச்சி... மூன்று மடங்கு உயர்ந்த சின்ன வெங்காயம் விலை! இல்லத்தரசிகள் கவலை!

By காமதேனு

கடந்த சில நாட்களாக குறைந்திருந்த சின்ன வெங்காயத்தின் விலை மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது. ரூ 15க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளதால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம்

தமிழகத்தில் கோவையில் ஆலந்துரை, பூண்டி, சிறுவாணி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்தும், நாசிக், புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக வருகிறது.

இதே போல் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதத்தில் வெங்காய வரத்து குறைவினால் விலை அதிகரித்து வந்தது. பின்னர் வெங்காய வரத்து அதிகரிக்கவே விலை குறைந்தது. இதையடுத்து கோவையில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.

தற்போது இவற்றின் விலை மெல்ல மெல்ல உயர்ந்த நிலையில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவை சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.25 முதல் ரூ.35 வரை அதிகரித்துள்ளது.

உள்ளூர் வரத்து மற்றும் வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக அதிகரித்து வரும் விலை உயர்வின் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது எனவும், இந்த விலை உயர்வு மேலும் சில வாரங்கள் நீடிக்கும் எனவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த விலை உயர்வினால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE