100 நாட்களுக்குள் மூன்று மில்லியன் யூனிட்டுகள்... விற்பனையில் சாதித்த செல்போன் இதுதான்!

By காமதேனு

இந்தியாவில் ரெட்மி 12 சீரிஸ் (Redmi 12 Series) செல்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட 100 நாட்களுக்குள் 3 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ரெட்மி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள ரெட்மி 12 சீரிஸ் (Redmi 12 Series) செல்போன்கள் 100 நாட்களில் மூன்று மில்லியன் யூனிட் விற்பனையாகியுள்ளது. சியோமி இந்தியா நிறுவனம் இந்த சாதனையை தங்கள் அதிகாரபூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ரெட்மி 12, 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரெட்மி 12 5ஜி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போன்களை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

ரெட்மி 12 5ஜி போன் 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது ரெட்மி 12 5ஜி போன். குறிப்பாக இதுபோன்ற சிப்செட் கம்மி விலையில் வெளிவருவது இதுவே முதல்முறை. மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் இதில் ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது.

மேலும் இதில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

மேலும் IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மூன்ஸ்டோன் சில்வர் ( Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் ரெட்மி 12 5ஜி போன் கிடைக்கும்.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கம்மி விலையில் கிடைப்பதால் இதை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன் காரணமாகவே விற்பனையில் அது சாதனை புரிந்துள்ளது.


இதையும் வாசிக்கலாமே... HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE