செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மெய்நிகர் முகவர் ஒருவரை உருவாக்கி, வாடிக்கையாளர்களை சமாளிப்பதில் உலகின் முன்னோடியாக சாதனை படைத்திருக்கிறது ’ஏர் இந்தியா’ நிறுவனம்.
மகாராஜா என்பது ஏர் இந்தியாவின் பிரிக்க முடியாத அடையாளங்களில் ஒன்று. டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிய பிறகு ‘மகாராஜாவுக்கு’ உரிய மரியாதை தந்து வருகிறது. விமான சேவை நிறுவனங்கள் மத்தியில் உலகின் முதல் ஏஐ விர்ச்சுவல் ஏஜெண்டை உருவாக்கி அதற்கு மகாராஜா எனப் பெயரிட்டிருக்கிறது ஏர் இந்தியா.
இந்த மகாராஜா இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் என 4 மொழிகளில் இப்போதைக்கு பதில் அளிக்கிறார். தினத்துக்கு 6 ஆயிரம் கேள்விகளை எளிதில் கையாள்கிறார். 1300 தலைப்புகளின் கீழான கேள்விகளை தடங்கலின்றி பதிலளிக்கிறார். 80 சதவீத கேள்விகளுக்கு வெற்றிகரமாக பதிலளித்து விடுகிறார். 15 சதவீத வினாக்களுக்கு மட்டும் உதவியாளர் தேவைப்படுகிறார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அஸூர் ஏஐ அடிப்படையில் மகாராஜா வடிவமைக்கப்பட்டுள்ளார். சோதனை ஓட்டமாக மார்ச்சில் தொடங்கப்பட்ட மகாராஜா வெற்றிகரமாக தன்னை நிரூபித்திருக்கிறார். ’இது வாடிக்கையாளர் சேவையின் புதிய சகாப்தத்தின் ஆரம்பம்’ என்கிறது ஏர் இந்தியா.
சாட்ஜிபிடி உட்பட உலகமே செயற்கை நுண்ணறிவின் பின்னே அணி திரண்டிருக்க, ஏர் இந்தியா நிறுவனம் சக விமான சேவையாளர்களை முந்திக்கொண்டு உலகின் முதல் ஏஐ விர்ச்சுவல் ஏஜெண்டை வெற்றிகரமாக்கி இருக்கிறது. சோதனையோட்டம் வெற்றிகரமானதை தொடர்ந்து மகாராஜா கூடுதல் அம்சங்களுடன் விரைவில் முழு ஓட்டத்துக்கு வெளிவருவார்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!