இந்திய பெருநகரங்களின் மாசுபாடு மற்றும் நெரிசலை குறைக்கும் நோக்கில், மின்சாரத்தால் இயங்கும் ஆகாய டாக்சிகள் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பட இருக்கின்றன.
டெல்லி, மும்பை போன்ற இந்தியப் பெருநகரங்களில் சாலைப் பயணத்தில் கடும் நெரிசல், அதனால் எழும் காற்று மாசு ஆகியவை அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. இதனால் இயல்பான போக்குவரத்துக்கு அப்பால் அவசரகால மருத்துவ மற்றும் இதர சேவைகள் சவாலாக மாறி உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மின்சாரத்தால் இயங்கும் பறக்கும் கார்கள் இந்த நகரங்களில் விரைவில் அறிமுகமாக உள்ளன.
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் தாய் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது. இவற்றின் மூலம் வழக்கமாக 60 முதல் 90 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் சாலைப் பயண தூரத்தை எண்ணி ஏழு நிமிடங்களில் ஏர் டாக்சி மூலம் கடந்துவிடலாம். பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேருடன் பறக்கும், ’மிட்நைட்’ ரக ஏர் டாக்சி பயன்பாட்டுக்கு வருகிறது.
பயணிகள் போக்குவரத்தைவிட ஆம்புலன்ஸ் சேவை, பொருட்கள் இடப்பெயர்வு உள்ளிட்ட அவசர காலத்தேவைக்கும் இந்த ஏர் டாக்சிகள் பயன்பட இருக்கின்றன. இதன் அடுத்தகட்டமாக இதர தேவைகளுக்கும் ஏர் டாக்சிகள் விரிவுபடுத்தப்படு. டெல்லி, மும்பை, பெங்களூரு என இந்தியாவின் முதன்மையான பெருநகரங்களில் இந்த ஏர் டாக்சிகள் முதலில் அறிமுகமாகின்றன.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏர் டாக்சிகள் பயன்படுத்தப்படும். ஒரு ஓட்டத்தில் சுமார் 161 கிமீ தொலைவைக் கடக்க இந்த ஏர் டாக்சிகள் உதவும். ஹெலிகாப்டர் போன்று செங்குத்துவாக்கில் எழும்பவும், தரையிறங்கவும் எளிதானவை என்பதால், சற்றே பெரிய மொட்டை மாடிகளில் கூட ஏர் டாக்சிகள் வந்து செல்ல முடியும்.சுமார் 200 ஏர் டாக்சிகளுடன் 2016 முதல் இவற்றின் சேவை தொடங்க இருக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!