சென்னை - பாடி சிடிஹெச் சாலையில் தொடரும் ஆக்கிரமிப்பு!

By துரை விஜயராஜ்

பாடி சிடிஹெச் சாலையின் நடுவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சாலை ஆக்கிரமிப்பாலும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னையின் வடமேற்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கியமான சாலைகளில் ஒன்று சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை (சிடிஹெச் ரோடு). பாடி சந்திப்பில் இருந்து தொடங்கும் இந்த சாலை பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

தினசரி இந்த வழியாக லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில், இந்த சாலையை இருபுறங்களிலும் கடைகள் ஆக்கிரமித்திருப்பதால், சாலையின் அளவு குறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது இந்த சாலை 100 அடி அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக இந்த சாலை தற்போது சுமார் 50 அடி கொண்டதாகமட்டுமே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிறுத்தம் சிக்னலில் இருந்து பாடி சிக்னல் வரை சாலையோரம் பல கடைகள் ஆக்கிரமித்திருப்பதால், இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது.

இதனால், ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் இந்த சாலையில்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, ரயில்வே ஸ்டேசன் சாலை சந்திப்பில் இருந்து பாடி சிக்னல் நிழற்சாலை வரை கடைகளால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பல கடைகளின் வாசல் பகுதியே, சிடிஹெச் சாலையில் தான் இருக்கிறது. இதனால், அந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

தினமும், அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எனநூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. பெரும்பாலும், அந்த சாலையில் கனரக வாகனங்கள், வெளியூர் செல்லும் பேருந்துகள் செல்கின்றன.

எனவே, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், கனரக வாகனங்கள், பேருந்துகள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதன் காரணமாகவே அந்த சாலையில் ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், கனரக வாகனங்கள்
செல்ல இடையூறு ஏற்படுகிறது.

மேலும், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலைய சிக்னலில் இருந்து, பாடி சிக்னல் வரை வரும் வழியெங்கும், சில இடங்களில் சாலை அகலமாகவும், சில இடங்களில் குறுகலாகவும் இருக்கிறது. அகலமாக இருக்கும்பகுதியில் வாகனங்கள் எந்த இடையூறும் இல்லாமல், நெரிசலின்றி செல்கின்றன. ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக குறுகலாக இருக்கும் பகுதியில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், அந்த சாலையின் நடுப்பகுதி வரை வாகனங்கள் ‘பார்க்கிங்’ செய்யப்படுவதால், சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, இந்த சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை சரி செய்து, வாகனங்கள் சிரமமின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாலமுருகன்

இதுகுறித்து அம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலமுருகன் கூறும்போது, ‘நான் தினமும் இந்த சாலைவழியாக தான் அலுவலகத்துக்கு சென்றுவருகிறேன். தினமும் இந்த சாலையில்ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக, ரயில்வே ஸ்டேசன் சாலை சந்திப்பு முதல் பாடி சிக்னல் வரை, பலகடைகள் சாலையை ஆக்கிரமித்திருப்பதாக தெரிகிறது.இதனால், அந்த கடைக்கு செல்வோர் சாலை நடுவில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

அதாவது சாலையின் நடுவில் வெள்ளை நிறத்தில் போடப்பட்டிருக்கும் மையக் கோட்டை தொடும்அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால், போக்குவரத்து நெரிசலும்ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில்வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது.

சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான போக்குவரத்துக்கு அதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE