ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு... எலான் மஸ்க் வாங்கியதைவிட பாதியாக சரிந்தது!

By காமதேனு

கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபோது இருந்த அதன் மதிப்பு, தற்போது பாதிக்கும் கீழாக சரிந்துள்ளது. அதாவது 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிய ட்விட்டரின் தற்போதைய மதிப்பு 19 பில்லியன் டாலராக சரிவு கண்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே எலான் மஸ்க் ஏகப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறார். நிதி நெருக்கடி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களின் பெயரில் பாதிக்கும் மேலான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினர். ட்விட்டர் உள்ளடக்கத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களால், விளம்பவர வருவாய் 60 சதவீதம் சரிந்தது.

எலான் மஸ்க் - எக்ஸ்

ட்விட்டர் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியில் எலான் மஸ்க் அதன் பிறகாக மேற்கொண்ட முயற்சிகளும் பலிக்கவில்லை. ட்விட்டர் பயனர்களுக்கு கட்டண விதிப்பு முறையை அமல்படுத்தியபோதும், ட்விட்டர்வாசிகள் மத்தியில் அதற்கு வரவேற்பில்லை. ட்விட்டர் நிறுவனத்தின் கடனுக்கான வட்டியாக மட்டுமே வருடாந்திரம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட வேண்டியதானது.

ட்விட்டரின் பெயரை ’எக்ஸ்’ என்பதாக மாற்றியதையும், பயனர்கள் ரசிக்கவில்லை. அடுத்தபடியாக அனைத்தும் அடங்கிய சமூக ஊடக செயலியாக ட்விட்டரை மாற்ற எலான் மஸ்க் முயற்சி மேற்கொண்டார். மணிக்கணக்கிலான வீடியோக்கள், ஆடியோ - வீடியோ கால்கள் வசதி என அந்த மாற்றங்கள் நீண்டன. போட்டிக்கு களத்தில் இருக்கும் சமூக ஊடகங்களின் சிறப்பு அம்சங்களை ட்விட்டரில் அறிமுகம் செய்து பார்த்தார்.

ட்விட்டர் - எலான் மஸ்க்

ஆனால் இவை எதுவுமே நடைமுறைக்கு உதவவில்லை. இதன் விளைவாக கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியபோது 44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அதன் மதிப்பு, தற்போது பாதிக்கும் கீழாக சரிந்து 19 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஆனபோதும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யனாக ட்விட்டரை மீட்கும் பணியில் எலான் மஸ்க் தீவிரமாக இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE