சேலம் மாவட்டத்தில் பெற்றோர் சம்மதத்துடன் பாரதியார் சிலை முன்பாக சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜ்கமல். இவர் வானகம் பகுதியில் இயற்கை விவசாயி பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு கல்லூரியிலிருந்து இன்டன்ஷிப் பயிற்சிக்காக வந்திருந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த வைசாலி என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அது காதலாக மாறியது.
மேலும் இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அத்துடன் சாதி மறுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திட சுயமரியாதை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் இவர்கள் காதல் குறித்து வீட்டில் பேசினர். இதற்கு இரு வீட்டார் தரப்பிலும் ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து, சேலம் சுப்பராயன் சாலையில் உள்ள பாரதியார் சிலை முன்பு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்றனர். பல லட்ச ரூபாய் செலவு செய்து திருமண முடிக்கும் இன்றைய காலகட்டத்தில் சில லட்சியங்களோடு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியின் செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!