நிர்மலா சீதாராமனை சந்தித்த பேடிஎம் சிஇஓ... ஆர்பிஐ நடவடிக்கையால் கலக்கம்!

By காமதேனு

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ஆர்பிஐ நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துப் பேசினார்.

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, வரும் மார்ச் 1-ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கில் புதிய வைப்புத் தொகையைச் செலுத்துதல், புதிய நிதி பரிமாற்றங்கள், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது.

பேடிஎம்

மேலும், பல கணக்குகளில் ஒரே பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பெருமளவில் நிதி மோசடி நிகழ்ந்திருக்ககூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிஜிட்டல் வேலட், வைப்புத்தொகை மற்றும் கடன் சேவைகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கூறியதைத் தொடர்ந்து, பேடிஎம் பங்குகள் கடந்த வாரம் 40 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவைச் சந்தித்தன. நேற்று முதலே அந்நிறுவனத்தின் பங்குகள் மீளத் தொடங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கியின் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா

10 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளில் அரசாங்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என விஜய் சேகர் ஷர்மாவிடம் கூறப்பட்டதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளையும் விஜய் சேகர் ஷர்மா சந்தித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளிலில் உள்ள தொகையை எந்த வரம்பும் இல்லாமல் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE