நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

By காமதேனு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை நாளை காலை 7.30 முதல் 9 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.

ககன்யான் விண்கலம்

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதற்காக, கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டன.

ககன்யான் விண்கலம்

பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, 2 அல்லது 3 நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டு பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். வரும் 2024-ம் ஆண்டு இத்திட்டத்தை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயார் நிலையில் ககன்யான் விண்கலம்

இந்நிலையில், ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையத்திலிருந்து நாளை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் ககன்யான் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக இஸ்ரோ அண்மையில் அறிவித்தது. ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE