தேசிய அளவிலான சோலார் கார் பந்தயம்... கோவை மாணவர்கள் அசத்தல்!

By காமதேனு

நாக்பூரில் நடைபெற்ற சோலார் கார் பந்தயத்தில் கோவையைச் சேர்ந்த பொறியியல் துறை மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் பயன்பாடு இல்லாமல் இயங்கும் எலக்ட்ரிக் வகை கார்கள் அடுத்த தலைமுறையின் நவீன தொழில்நுட்பமாக உருவாகியுள்ளது. முன்னனி நிறுவனங்கள் இந்த வகை கார்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கோவையைச் சேர்ந்த பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள், சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி மலுமிச்சம்பட்டியில் உள்ள இந்துஸ்தான் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் நாக்பூரில் நடைபெற்ற சோலார் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள் ஒட்டு மொத்த புள்ளிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளனர். தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவர்களுக்கு, கல்லூரி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவ, மாணவிகள், அடுத்த தலைமுறை நவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு செல்லும் விதமாகவும், பெட்ரோல், டீசல் இல்லாத சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சோலார் மற்றும் எலக்ட்ரிக் கார்களைச் சொந்தமாக குழுவாக உருவாக்கி பந்தயங்களில் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE