ஆன்லைன் கேமிங் செயலி வாயிலாக விளையாண்டதில் ரூ1.5 கோடி பரிசை வென்றிருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர். ஆனால் துறை விசாரணை காரணமாக பரிசுத் தொகை கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத சோகத்தில் அவர் ஆழ்ந்திருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே சின்ச்வாட் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சோம்நாத் ஜெண்டே. ’ட்ரீம் 11’ என்ற ஆன்லைன் கேமிங் செயலி வாயிலாக இவர் ரூ1.5 கோடி பரிசாக வென்றிருக்கிறார். வரி பிடித்தங்கள் போக பரிசுத் தொகை, அவரது வங்கி கணக்குக்கு வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் காவல்துறை உயரதிகாரிகளின் திடீர் விசாரணை காரணமாக பரிசுத் தொகை முழுதா கைக்கு கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார் சோம்நாத்.
ஆன்லைன் கேமிங் தளங்கள் இந்தியாவில் புற்றீசலாய் முளைத்திருக்கின்றன. அவற்றின் விளையாடுகிறேன் பேர்வழி என்று அந்த பழக்கத்துக்கு அடிமையாகி, குடும்ப சேமிப்பை தொலைத்து, தற்கொலை செய்துகொள்வோரும் நாட்டில் அதிகரித்துள்ளனர். எனவே இந்தியாவின் பல மாநிலங்களிலும் இது போன்ற கேமிங் செயலிகளை தடை செய்திருக்கிறார்கள்.
விளையாட்டு என்பதற்கும் சூதாட்டம் என்பதற்கும் இடையிலான சொற்ப இடைவெளி காரணமாக, இந்த கேமிங் செயலிகளை சூதாட்ட செயலிகளாக பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். இதனை முன்வைத்தும் சப் இன்ஸ்பெக்டர் சோம்நாத்துக்கு எதிராக உயரதிகாரிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
’மிகவும் நெருக்கடியான பணிச்சூழலில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் சோம்நாத்துக்கு எப்படி ஆன்லைன் கேம்களை விளையாட நேரம் கிடைத்தது. அப்படியென்றால் அவர் பணி நேரத்தில் விதிகளை மீறி விளையாண்டாரா... பணியில் அலட்சியம் காட்டினாரா... காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடலாமா?’ என்பது போன்ற விசாரணைகளும் சோம்நாத்தை குடைந்து வருகின்றன.
ரூ.1.5 கோடி பரிசாக விழுந்ததில், தவணை முறையில் இரண்டிரண்டு லட்சங்களாக சோம்நாத்தின் வங்கிக் கணக்கில் சேர்ந்து வருகின்றன. 30% வரி போக எஞ்சிய தொகை மட்டுமே வங்கியை எட்டி வருகின்றன. ஆனால் துறை ரீதியிலான விசாரணை காரணமாக சோம்நாத் துவண்டு போயிருக்கிறார். பரிசுத் தொகையில் பாதி தொகையை எடுத்து வீட்டின் மீதான கடனை தீர்க்க வேண்டும்; இதர தொகைகளை வைப்பு நிதியில் சேர்த்து அதன் வட்டியைக் கொண்டு குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருந்த சோம்நாத் இப்பொது கவலையில் ஆழ்ந்திருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!