புகை சூழ வாழும் திண்டிவனம்வாசிகள் மக்கள் - என்ன ஆனது திடக்கழிவு மேலாண்மை திட்டம்?

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் இருந்தும் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் திண்டிவனம் - சென்னை பைபாஸ் சாலையில் சலவாதி அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அதிகளவில் குப்பைகள் குவிந்ததால் துப்புரவு பணியாளர்களே தீ வைத்து எரித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 2011-16-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக ரூ. 22 கோடி மதிப்பீட்டில் ஜேசிபி இயந்திரம் உட்பட விலை உயர்ந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களுக்காக செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல் படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தத் திட்டத்தின் கீழ் சலவாதி மற்றும் அவரப்பாக்கம் ஆகிய இரு இடங்களில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்காக தரம்பிரிக்கப்பட்டது. இதற்கிடையே சலவாதியில் உள்ள குப்பைக் கிடங்கில், திண்டிவனத்தில் செயல் படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சுத்திகரிப்பு நிலை யம் கட்டப்பட்டு வருகிறது.

இதனால் தினமும் டன் கணக்கில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக குப்பைகளை திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி விடுகின்றனர். குறிப்பாக சென்னை ரோடு, மயிலம் ரோடு, காவேரிப் பாக்கம் ஏரி, சந்தைமேடு உள்ளிட்ட பகுதிகளில், குப்பைகளைக் கொட்டுகின்றனர்.ஒரு சில பகுதிகளில் குவிந்து கிடக்கும் பேப்பர், பிளாஸ் டிக் கழிவுகளை ஒன்றாக சேர்த்து, துப்புரவு பணியாளர்களே தீ வைத்து எரிக்கின்றனர்.

இதன் காரணமாக நகர பகுதி முழுதும் புகைமூட்டமாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் மாரி செட்டிகுளம் அருகே உள்ள ரோசணை சுடுகாட்டில் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி, குப் பைக்கு தீ வைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தச் சிக்கல்களால் தற்போது நகராட்சிக்கு என்று முறையான குப்பை சேகரிக்கும் கிடங்கோ, குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கோ இல்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகளை எரித்து நகரத்தையே பாழ்படுத்தி வருகின்றனர்.

இந்தக் குப்பை கொட்டு விவகாரம் தொடர்பாக, நகர்மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தும் நகராட்சி நிர்வாகம் எதையும் காதில் வாங்கியதாக தெரியவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, 'நகரில் குப்பைகள் முழுதும் தரம்பிரித்து, அள்ளப்படுகின்றன. இந்தக் குப்பைகளை உரம் தயாரிக்க பயன்படுத்தி வருகிறோம்” என்றே தெரிவிக்கின்றனர்.

ஆனால் பொது மக்கள் தரப்பில் ஒவ்வொரு பகுதியையும் சுட்டிக்காட்டி தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். “குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு, இது பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் நகராட்சி துப்புரவு பணியாளர்களும் குப்பைகளை தொடர்ந்து நகரப் பகுதிகளில் எரித்து வருகின்றனர்.

துப்புரவு பணியாளர்கள் பொது மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை வாங்குவது கிடையாது. பெயரளவிற்கு காய்கறி கழிவுகளை மட்டுமே தனியாக பெறுகின்றனர்” என்று பொதுமக்கள் தரப்பில் தெரி விக்கின்றனர். நகர்மன்ற கூட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தும் நகராட்சி நிர்வாகம் எதையும் காதில் வாங்கியதாக தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE