ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் புதிய உச்சம் தொட்டன.
சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது. பங்குச்சந்தையில் லாபம் பார்க்கத் துடிக்கும் நீண்ட கால முதலீட்டாளர்கள் முதல் தினசரி வர்த்தகர்கள் வரை பலருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கற்பகத்தருவாக விளங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் முதலீடுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய நாள் வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் 2% உயர்ந்து ரூ.2700-க்கு மேல் எகிறியது. இந்த புதிய சாதனையின் மூலமாக ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ18 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஒப்பீட்டளவில் கடந்தாண்டு ரிலையன்ஸ் பங்குகள் 9% வரை சரிந்துகிடந்தன. தற்போது புத்தாண்டு பிறந்தது முதலே புதிய எழுச்சியாக ரிலையன்ஸ் பங்குகள் உயர்வு கண்டன. கடந்த இரு வர்த்தக தினங்களில் மட்டும் சுமார் 4% உயர்ந்தன.
இதனால் பெரும்பாலான பங்குத் தரகு நிறுவனங்களின் முதல் பரிந்துரையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் புதிய இலக்கு விலையாக கோல்ட்மேன் நிறுவனம் 2,885 ரூபாயாகவும், ஜெஃபரீஸ் நிறுவனம் 3,125 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளன.
வரும் மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகியவை பட்டியலிடப்படுவது தொடர்பான எதிர்பார்ப்புகள் சந்தையில் அதிகம் நிலவுகின்றன. அடுத்த ஒன்றரை வருடங்களில் எதிர்பார்க்கப்படும் பிராட்பேண்ட் சந்தை விரிவாக்கம், மொபைல் கட்டண உயர்வின் சாத்தியங்கள் ஆகியவையும் இவற்றில் அடங்கும். நேற்றைய தினம் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, ஜாம்நகர் பசுமை எரிசக்தி வளாகம் நடப்பாண்டின் மத்தியில் தொடங்கப்பட இருப்பதாக அறிவித்ததும் ரிலையன்ஸ் திசையில் காற்று வீசுவதை கூட்டியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!
பகீர்... நடுரோட்டில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு!
லெஸ்பியன் ஜோடிக்கு கோயிலில் நடந்த திருமணம்!
இனி பி.எட் படிப்புகளுக்கு தடை; மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!