தனக்கு விசுவாசம் காட்டிய பலரும் இப்போது ஈபிஎஸ் பக்கம் போய்விட்டாலும் இன்னமும் தஞ்சை மண்ணில் தன்னம்பிக்கை குறையாமல் நிற்கிறார் வைத்திலிங்கம். கட்சி களேபரங்களால் சென்னைக்கும் தஞ்சைக்குமாய் பறந்துகொண்டிருந்தவர் தனது தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தை சுத்தமாக மறந்தே போனாராம். அரசல் புரசலாக அபிமானிகள் யாரோ சிலர் இதை ஞாபகப்படுத்த, எஞ்சியுள்ள ஆதரவாளர் சகிதம் போய் கட்சி அலுவலகத்தைத் திறந்து அங்கே தனது கொடியை நாட்டிவிட்டாராம் வைத்தி. இப்போது அவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம் அந்த அலுவலகம். இந்த விஷயம் தெரிந்ததும், “ஆகா... கோட்டைவிட்டுட்டோமே” என பதறிய ஈபிஎஸ் டீம், வைத்தி இல்லாத நேரம் பார்த்து அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க இப்போது ஸ்கெட்ச் போடுகிறதாம். இந்த முயற்சியில் முழு மூச்சாய் இருப்பவர், இத்தனை நாளும் வைத்திக்கு வலதுகரமாக இருந்த ஒரத்தநாடு காந்தி என்பது கூடுதல் ஃப்ளாஷ் நியூஸ்!