அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறைக்கு வெளியே, ‘கட்சியினர், எம்எல்ஏ-க்களின் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது’ என வெளிப்படையாகவே எழுதி ஒட்டியிருக்கிறார். அந்த அறை பெரும்பாலும் பூட்டியேதான் இருக்கிறது என்பது வேறு விஷயம். அமைச்சரானதுமே தனது மொபைல் எண்ணையும் மாற்றிவிட்டாராம் மா.சு. இதனால் கட்சியினர் நியாயமான கோரிக்கைகளுக்குக்கூட அண்ணனைத் தொடர்புகொள்ள முடியாமல் அவதிப்படுகிறார்களாம். இதனிடையே, அப்பா அமைச்சரானதுமே லண்டனிலிருந்து சென்னைக்கு ஜாகையை மாற்றிவிட்ட மா.சுவின் மகனும், மருத்துவருமான இளஞ்செழியன், நீலாங்கரையில் நீட்டாக ஒரு அலுவலகத்தைத் திறந்துவிட்டாராம். சென்னை அண்ணாநகரில் இளஞ்செழியனுக்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவரின் அலுவலகமும் இப்போது பிஸியாக இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் தான் சுகாதாரத்துறை சார்ந்த முக்கிய ‘திட்டங்கள்’ குறித்து பேசிமுடிக்கிறார்களாம். விஷயம் தெரிந்தவர்கள் இங்கு சென்று கமுக்கமாக காரியம் சாதித்து வருகிறார்களாம்.