மதிவேந்தனின் மவுசு குறையுமா?

By காமதேனு

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம் எனச் சொல்லப்படும் நிலையில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டுள்ளதாம் திமுக தலைமை. ராசிபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்த மதிவேந்தனுக்கு பரிசாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், மேலிடத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் விதமாக அவரின் செயல்பாடுகள் இல்லையாம். கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மதிவேந்தனுக்கு எதிராக கச்சிதமாக காய்நகர்த்துகிறாராம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை எம்பி-யுமான ராஜேஸ்குமார். உதயநிதியின் குட்புக்கில் இருக்கும் ராஜேஸ்குமார், மதிவேந்தனை எப்படியாவது மதிப்புக் குறைத்துவிட்டால் மாவட்டத்தில் மந்திரி கணக்காய் தாமே வலம் வரலாம் என்ற மனக்கணக்கையும் வைத்து காரியமாற்றுவதாகச் சொல்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE