இனி தேர்தல்ல நிக்கிறதா இல்லை!

By காமதேனு

ஜெயலலிதாவின் பிரச்சாரப் பயணங்களை ராணுவ ஒழுங்குடன் திட்டமிட்டு செயல்படுத்தி பேர் வாங்கிய செயல்புலி செங்கோட்டையன். ஆனால், அவரை இப்போது அதிமுகவில் இருக்கும் இடம் தெரியாமல் வைத்திருக்கிறார்கள். அண்மையில், கட்சியில் தனது நிலைமையைப் பற்றி தனது நண்பர் ஒருவரிடம் வருத்தப்பட்டுப் புலம்பிய செங்கோட்டையன், “அம்மா இருந்த போது என்னை எத்தனை உயரத்தில் வைத்திருந்தார். ஆனால் இப்ப, இரண்டு சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கிய ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக சுருக்கி உட்கார வைச்சிருக்காங்க. மக்கள் செல்வாக்குல ஒன்பது முறை எம்எல்ஏ ஆகியாச்சு. இந்த மரியாதையோட அரசியல் வாழ்க்கை போதும்னு நினைக்கிறேன். ஏன்னா, அடுத்த தேர்தல்ல ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் குடுத்தாதான் ஜெயிக்க முடியும். அவ்வளவு பணம் குடுக்க நமக்கிட்ட இனி வசதியில்ல. அப்படியே யாராச்சும் பணம் குடுத்து நிக்கச் சொன்னாலும் இனி நான் தேர்தல்ல நிக்கிறதாவும் இல்ல” என்று சொன்னாராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE