சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிப் பணத்தை முறையாக விநியோகம் செய்யவில்லை. அதனால்தான் கேரளத்தில் பாஜக படுதோல்வி கண்டது என மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் மீது ஏகத்துக்கும் புகாராம். இது தொடர்பாக டெல்லிக்கே நேரில் போய் விளக்கம் கொடுத்துவிட்டு வந்தார் சுரேந்திரன். இருந்தாலும் “அண்ணனுக்கு ரொம்ப நாளைக்கி வண்டி ஓடாது” என ஆருடம் சொல்லும் கேரள பாஜகவினர், அடுத்த தலைவராக நடிகர் சுரேஷ்கோபி நியமிக்கப்படலாம் என்றும் காதைக் கடிக்கிறார்கள். தற்போது ராஜ்யசபா எம்பி-யாக இருக்கும் சுரேஷ்கோபி, நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரை மாநிலத் தலைவர் ஆக்கினால் நாயர் சமூகத்தினரை தங்கள் பக்கம் திருப்பலாம் என்று பாஜக மேலிடத்துக்கு மாநில பாஜகவிலிருந்து சிலர் டிப்ஸ் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.