கரிசனம் காட்டும் காமராஜ்

By காமதேனு டீம்

அமைச்சராக இருக்கையில், தனது நன்னிலம் தொகுதிக்குள் கட்சிக்காரர்கள் வணக்கம் வைத்தால்கூட பார்க்காதது போல செல்வார் முன்னாள் உணவு அமைச்சர் காமராஜ். ஆனால், தற்போது அவரது போக்கில் பெரும் மாற்றம். கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளாமல் நின்றால் கூட காரை நிறுத்தி, “என்ன சவுக்கியமா இருக்கியா?” என்று நலம் விசாரிக்கிறாராம். அண்ணனின் மாற்றத்முக்கு காரணம் ரெய்டு பயம்தான் என்கிறார்கள். உணவுத் துறையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக திமுகவினர் சொல்லி வரும் நிலையில், ரெய்டு, கைது நடவடிக்கைகள் பாய்ந்தால் நமக்கும் நாலு பேர் வேண்டும் என்பதே காமராஜின் இந்த திடீர் கரிசனத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE