கவிஞர் அம்சப்ரியா. பொள்ளாச்சிக்காரர். கவிதை, கட்டுரை, கதை என 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார். பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி இளம் படைப்பாளர்களை உருவாக்கியும் வருகிறார். கதைகள், கட்டுரைகளை விட இவரின் கவிதைகள் ஏகமாய் பேசப்படுபவை. அதிலும் இவர் உருவாக்கிய கவிஞர்கள் நூற்றுக்கணக்கில் இவரைப் பற்றி பேசுகிறார்கள். அவரின் வலைப்பூவில் இருக்கும் நெகிழ்ச்சி மிகு கவிதை இந்த ‘யானை வளர்க்கிறேன்’.
நான் ஒரு யானை வளர்க்கிறேன்
இரவுதான் அதை மேய்ச்சலுக்கு அனுப்புகிறேன்
அதை அது எதிர்ப்பதே இல்லை
பிரதிபலனாக
நான் உறங்கியபின்
தன் விளையாட்டுப் பொருளாக
என்னையே பயன்படுத்துகிறது
விடிந்ததும் இதை
அந்த யானைதான் மிக கேலியுடன்
என்னிடம் கூறிக்கொண்டே இருக்கிறது
யானைதான் என்னை வளர்க்கிறதென
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறது
இரவொரு மதங்கொண்ட யானையென
குறி சொல்லிப்போகிறார் கோடங்கிக்காரர்.
அம்சப்ரியாவின் படைப்புகளை காண இங்கே க்ளிக் செய்யவும்