பீதி கிளப்பும் தாலிபான்!

By காமதேனு

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றிய செய்தி வெளியானதுமே, உலக நாடுகள் முழுவதிலும் ஒருவித பதற்றம் பரவ ஆரம்பித்தது. அடுத்தடுத்து, இணையத்திலும் ஊடகங்களிலும் வெளியான வீடியோக்களும் புகைப்படங்களும் அதை மேலும் அதிகரித்தன. ஒருபக்கம் தாலிபான்களின் துப்பாக்கி ஏந்திய கூட்டங்கள் ஆப்கன் வீதிகளில் மக்களை பயமுறுத்தும் காட்சிகள். மறுபக்கம் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க விமானங்களில் தொங்கிக் கொண்டிருந்த மக்கள் திரள் காட்சிகள். ஆப்கன் மக்களின் இந்த நிலை உலக மக்களின் மனங்களைக் கலங்கடித்தது. இணையத்தில் பலரும் அவர்களுக்காகக் குரல் எழுப்பினர்.  இணையத்தில் ஆப்கன் குறித்த செய்திகளும், பதிவுகளும்தான் நிறைந்து கிடக்கின்றன. தாலிபான்களோ,  “யாருக்கும் எங்களால் அச்சுறுத்தல் இருக்காது, பயப்பட வேண்டாம். பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அனைவருக்குமான உரிமைகள் ஷரியத் சட்டப்படி வழங்கப்படும்” என்கின்றனர். ஆனாலும், உலகமே பீதியில் உறைந்து போயிருக்கிறது. ஆப்கனில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் உலக நாடுகளை அசைத்துக் கொண்டிருக்கிறது.  

***

அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. - ராமதாஸ்

இந்த டயலாக்கை கேட்டுக் கேட்டு போரடிக்குது டாக்டர். புதுசா வேற ஏதாவது டயலாக் சொல்லுங்க!- ரஹீம் கஸ்ஸாலி

***

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே பேச்சையே பேசி வருகிறார். - மல்லிகார்ஜுன கார்கே

அடப்பாவிகளா... இதையே இப்பத் தான் கண்டுபிடிக்கறீங்களா..!?- சரவணகவி

***

கரோனா பாதிப்பு குறைந்ததும் தொண்டர்களை சந்திக்க வருவேன். - சசிகலா

இப்ப ரெய்டு பாதிப்புதான் ஜாஸ்தியா இருக்கு சின்னம்மா..!- லட்சுமணன்

***

இந்தியாவிலேயே குழப்பம் நிறைந்த கட்சி காங்கிரஸ் மட்டும்தான். - அண்ணாமலை

'பெகாசஸ்' மூலமா கண்டுபிடிச்சதா பாஸ்..? - மயக்குநன்

***

கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே மது வாங்க அனுமதி!- செய்தி

உங்க ‘பாசத்துக்கு’ அளவே இல்லப்பா..! - நெல்லை அண்ணாச்சி

***

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது. - கமல்ஹாசன்

அதுக்கென்ன... சாயம் வெளுத்தா அடிச்சிக்கிட வேண்டியது தான்!- தர்மஅடி தர்மலிங்கம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE