அன்பிலுக்கும் அடி சறுக்கும்!

By காமதேனு

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனது கன்னிப்பேச்சில், எனது நண்பன் என பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஸ்டாலின் குடும்பத்தில் தனக்கென தனியான செல்வாக்கை வளர்த்து வைத்திருப்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்படிப்பட்டவருக்கும் அடி சறுக்கி இருக்கிறது. மகேஷின் திருவெறும்பூர் தொகுதிக்குள் வரும் ‘பெல்’ தொழிற்சாலையின் தொழிற்சங்க தேர்தல் அண்மையில் நடந்தது. இதில் திமுகவை ஜெயிக்க வைக்க எவ்வளவோ மெனக்கிட்டார் மகேஷ். ஆனாலும், திமுகவை பின்னுக்குத் தள்ளி அதிமுக அணியை ஜெயிக்க வைத்திருக்கிறார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகேஷை எதிர்த்துப் போட்டியிட்ட, அதிமுக முன்னாள் எம்பி-யான குமார். இந்தத் தேர்தலில் திமுக தோற்றது கட்சித் தலைமைக்கு அன்பில் மகேஷ் மீதான அபிமானத்தை சற்றே குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் பக்கமோ, அதிமுகவை ஜெயிக்க வைத்த குமாரை சென்னைக்கே நேரில் அழைத்துப் பாராட்டினாராம் எடப்பாடியார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE