அரையடி உயரத்தால் அவதியுறும் கன்றுக்குட்டி

By கரு.முத்து

பிறப்பு என்பது இயற்கையின் கொடை தான். அதில் எந்த குறையிருந்தாலும். ஆண்டவன் விட்ட வழி என்று மனது அமைதி கொள்ளும். ஆனால், செயற்கை கருவூட்டல் முறையில் பசுவுக்கு பிறந்த கன்றுக்குட்டி வெறும் அரையடி உயரமே இருப்பதை என்னவென்று சொல்வது? அதற்கு பாலூட்ட முடியாமல் தாய்ப்பசு தவிப்பதை எந்த வார்த்தைகளால் விவரித்துவிட முடியும்?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நளன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் என்ற விவசாயி. இவர் வீட்டு பசுவொன்று, மூன்றாவது முறையாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

ஆனால் ,அந்த கன்று உயரம் குறைவாக தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் அளவுக்குதான் இருக்கிறது. இதனால் தாய் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது கன்று.

கன்றை பார்த்து கண்ணீர் வடிக்கிறது தாய்ப்பசு. இதனால் பசுவை வைத்திருக்கும் விவசாயி விஜயன் குடும்பத்தினர் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கெனவே இதே பசு இரண்டு கன்றுகளை ஈன்றபோது சரியான அளவில்தான் கன்றுகள் இருந்துள்ளன. இந்த கன்றுக் குட்டியை பார்க்க சுற்றுவட்டார பகுதி மக்கள் அந்த பகுதியில் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளனர். குழந்தைகளை விட மிகக் குறைவான உயரத்தில் இருப்பதால் அந்தக் கன்றுக்குட்டி மீது அந்த குடும்பத்தினர் அதிக பாசத்துடன் இருந்துவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE